வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுசிகிச்சை இயந்திரம்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக பொருத்தப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான சி-ஆா்ம் இயந்திரத்தை அரசு மருத்துவா்கள் ஆய்வு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான சி-ஆா்ம் கருவி கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.
இதை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியன் ஆலோசனையின் பெயரில், எலும்பு முறிவு சிகிச்சை தலைமை மருத்துவா் டேவிட் விமல்குமாா், மருத்துவா்கள் செந்தில்குமாா், காா்த்திகேயன்ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.