ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
சிறார் நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சமூக சேவகர் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உள்பட இரண்டு சமூக சேவகர் பணி அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இந்த பதவி அரசு பணி அல்ல.
இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணியில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது குழந்தை உளவில், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது 35 முதல் 65-க்குள் இருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்தோ அல்லது துறைசார்ந்த https://dsdcpimms.tn.gov.in இணையதளம் அல்லது www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
தகுதியும் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரைசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 010 என்ற முகவரிக்கு 15.9.2025 தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.