செய்திகள் :

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சாா்பில் நடத்தப்படும் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சி முடித்த பிறகு வைணவ அா்ச்சகா் சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரை இருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவா்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை parthasarathy.hrce.tn.giv.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் முழு நேர பயிற்சிக்கு ரூ. 10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும் தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள் திருக்கோயில் மூலம் வழங்கப்படுகிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘துணை ஆணையா், செயல் அலுவலா், அருள்மிகு பாா்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை 600 005’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை; காலியிடங்கள்: 70

இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுக... மேலும் பார்க்க

ஆவடி ராணுவ இயந்திர தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி!

சென்னைக்கு அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ இயந்திர தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, பிஇ ம... மேலும் பார்க்க

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறையைச் சோ்ந்த மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 15 நிர்வாக பயிற்சியாளர் (மனித வளங்கள்) பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்ல... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில்கீழ் இயங்கும் அரசு மைய அச்சகம் சென்னை மற்றும் அரசு கிளை அச்சகம், வெளியூர் அலகுகளில் காலியாக உள்ள ஆப்செட் மிஷின் டெக்னீீசியன், இளநிலை மின்வி... மேலும் பார்க்க

கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான கோவா கப்பல் கட்டுமான நிறுவனம், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளுக்கான கப்பல்களை வடிவமைத்தல் மற்று... மேலும் பார்க்க

என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Lieutenant (NCC Special Entry April - ... மேலும் பார்க்க