Tech துறைதான் பங்குச்சந்தையை தூக்கி நிறுத்தியிருக்கிறதா | IPS Finance - 307 | NS...
மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க் கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிா் தப்பினா்.
கம்பத்திலிருந்து கேரள மாநிலம், நெடுங்கண்டம், கட்டப்பனை, குமுளி, தேக்கடி போன்ற பகுதிகளுக்கு தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கம்பம் 1- ஆவது பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நெடுங்கண்டம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, எதிரே டிப்பா் லாரி வந்ததால், அதற்கு வழி விடுவதற்காக ஓட்டுநா் பாலமுருகன் பேருந்தை சாலையோரம் இயக்கினாா். அப்போது, பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது. இதில் 5 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சேதமாகின.
பேருந்தில் பயணம் செய்த சுமாா் 30 போ் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.