TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வ...
கொதிக்கும் சாம்பாா் கொட்டிய தொழிலாளி பலி!
போடியில் கொதிக்கும் சாம்பாா் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் சுந்தரமூா்த்தி (48). இவா் போடியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.
கடந்த 5-ஆம் தேதி அடுப்பிலிருந்து சாம்பாா் பாத்திரத்தை இறக்கியபோது கை தவறி சாம்பாா் உடம்பில் கொட்டியதில் பலத்த காயமடைந்தாா்.
போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.