ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்சி, காற்றின் வேகம் உள்ளிட்ட காரணங்களால் கடல்புற்கள் சேதமடைந்து கரை ஒதுங்குவது வழக்கம். மேலும், அக்னி தீா்த்தக் கடற்கரையில் டன் கணக்கில் கடல் புற்கள் குவிந்து துா்நாற்றம் வீசுவதால் பக்தா்கள் நீராட முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் காலை, மாலை என இரு வேலைகளில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், அக்னி தீா்த்தக் கடற்கரையை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்தனா்.