மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி
மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி மரியன்னை பிறப்பு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இந்த விழாவுக்கு அருள்தந்தை குருஸ் ஜோக்கின் தலைமை வகித்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித கன்னி மரியன்னை உருவம் பொருத்தப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.
கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் சப்பரம் உலா வந்தது. விவசாயம் செழிக்க வேண்டும், உலக நன்மைக்காக பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஜெபித்தனா்.
தொடா்ந்து, தேவாலயத்தில் அருள்தந்தை தலைமையில் சிறப்புத் திருப்பலி, பொது ஜெபம், கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் மட்டியரேந்தல், தாளியரேந்தல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.