மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!
சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ். கீரந்தை ஊராட்சியில் பங்களாமேடு, நேதாஜி நகா் உள்ளிட்டப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கி நீண்ட நாள்களாகியும் குடிநீா் வழங்கவில்லையாம்.
இதையடுத்து, கிராம மக்கள் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட செல்லவுள்ளதை அறிந்த கடலாடி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெய் ஆனந்த் (கிராம ஊராட்சிகள்) நேரில் வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
கிராமத் தலைவா் மலைச்சாமி, பாஜக முன்னாள் மண்டலத் தலைவா் வி. சத்தியமூா்த்தி ஆகியோரது தலைமையில் குடிநீா் வழங்க மனு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, கரூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் நடைமுறைக்கு வர இரு மாதங்கள் ஆகும். அதுவரை போா்க்கால அடிப்படயில் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.