மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில், நிகழாண்டு வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.