எலுமிச்சை பழத்தில் ஏறியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய க...
``தந்தையின் சொத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்'' - கரிஷ்மா கபூரின் குழந்தைகள் கோர்ட்டில் வழக்கு
பிரியா சச்சிதேவ்
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
அவரது மரணத்தால் அவர் விட்டுச்சென்ற சொத்திற்கு மனைவிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சஞ்சய் கபூர் மூன்றாவதாக பிரியா சச்சிதேவ் என்பவரை திருமணம் செய்திருந்தார்.
பிரியாவிற்கு இத்திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார். சஞ்சய் கபூர் இறந்தவுடன் சஞ்சய் கபூரின் கம்பெனியில் பிரியா சச்சிதேவ் தன்னை ஒரு இயக்குநராக உள்ளே நுழைத்துக்கொண்டார்.
இதற்கு சஞ்சய் கபூரின் தாயார் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சஞ்சய் கபூரின் கம்பெனி ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது ஆகும். அதோடு சஞ்சய் கபூருக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது.
இந்த சொத்துக்களை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் விதமாக பிரியா சச்சிதேவ் காய்களை நகர்த்தி வருகிறார்.

சஞ்சய் கபூர்
கரிஷ்மா கபூரை சஞ்சய் கபூர் இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால் அவரை அவரது கணவர் சஞ்சய் கபூர் விவாகரத்து செய்துவிட்டார்.
அதோடு விவாகரத்து செய்யும்போது இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து ரூ.14 கோடி பத்திரம் எடுத்து கொடுத்திருக்கிறார். இதன் மூலம் மாதம் ரூ.10 லட்சம் கிடைக்க சஞ்சய் கபூர் வகை செய்திருக்கிறார்.
அதோடு மும்பையில் ஒரு வீட்டையும் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆனாலும் கரிஷ்மா கபூரின் இரண்டு பிள்ளைகளான சமைரா மற்றும் கியான் ஆகியோர் சேர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில் தங்களது தந்தையின் சொத்தில் தங்களுக்கு பங்கு கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உயில்
அவர்கள் தங்களது மனுவில்,''தங்கள் வளர்ப்புத்தாய் பிரியா சச்தேவ், சஞ்சய்யின் உயிலை போலியாக தயாரித்துள்ளார். தங்கள் தந்தையால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் உயில் சட்டப்பூர்வமான மற்றும் செல்லுபடியாகும் ஆவணம் அல்ல, போலியானது மற்றும் ஜோடிக்கப்பட்டதாகும்.
இந்தக் காரணத்தினால்தான் உயிலின் மூலப் பிரதியையோ அல்லது உயிலின் நகலையோ எங்களுக்கு காட்டப்படவில்லை. எனவே அந்த ஆவணத்தின் நகலை தங்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும்.

பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வரை உயிலை நிறைவேற்ற பிரியா சச்சிதேவிற்கு தடைவிதிக்கவேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இவ்விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதிய திருப்பமாக பிரியா சச்சிதேவ் தனக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள் சபிராவின் பெயரோடு கபூர் என்ற பெயரை சேர்த்திருக்கிறார்.
சொத்தில் அவருக்கும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிக்க சபிராவின் பெயரோடு கபூர் பெயரை பிரியா சச்சிதேவ் இணைத்திருப்பதாக கூறப்படுகிறது.