செய்திகள் :

``உடல் எடையை குறைக்க சன்மானம்!'' - ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுத்த நிறுவனம்; என்ன காரணம்?

post image

சீனாவின் ஷென்ழெனை (Shenzhen) தளமாகக் கொண்ட Insta360 என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையவாசிகள் இடையே பெரும் கவனம் பெற்று வருகிறது.

உடல் எடை | மாதிரிப்படம்

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி படி, Insta360 நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது உடல் எடையை குறைத்தால், அதற்கான சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது, அவர்கள் இழக்கும் ஒவ்வொரு 0.5 கிலோக்கும் 500 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் ₹6,100) வழங்கப்படும்.

ஊழியர்கள் பலரும் இதில் கலந்து கொண்ட நிலையில், ஷி என்ற ஊழியர் 90 நாட்களில் 20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதற்காக அவர் 20,000 யுவான் (சுமார் ₹2.47 லட்சம்) வென்றுள்ளார்.

தினசரி சரியான உடற்பயிற்சி

இது குறித்து அவர் கூறுகையில், “இது அழகு பற்றியது மட்டுமல்ல; ஆரோக்கியத்தை பற்றியது. கண்டிப்பான உணவுமுறை, தினசரி சரியான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் தான் இவ்வாறு உடல் எடையை குறைத்தேன்” என்று ஷி தெரிவித்துள்ளார்.

உடல் எடை

ஆரோக்கியமான வாழ்க்கை

2022 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அந்த நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை 2 மில்லியன் யுவான் (சுமார் ₹2.47 கோடி) வெகுமதியாக வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 99 ஊழியர்கள் சேர்ந்து மொத்தம் 950 கிலோ எடையை குறைத்து, 1 மில்லியன் யுவான் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

“ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவது, மேலும் ஊழியர்கள் வேலைகளைத் தாண்டி தங்களது உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Dosa: தோசை மீதான காதலால் கோடிகளில் லாபம் ஈட்டும் தம்பதியினர்; ஓர் அடடே ஸ்டோரி!

அதிக சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு தோசை மீதான காதலால் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.அகில் ஐயர் மற்றும் ஸ்ரேயா நாயர் என்ற தம்பதியினர் புதுமண தம்பதிகளாக மும்பையில் தரை ... மேலும் பார்க்க

மரத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்ட நபர்; மதிப்பு ரூ.11,000 என தெரிந்ததால் ரயில்வே அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மற்றும் நாந்தேட் இடையேயான ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது யவத்மால் மாவட்டத்தில் உள்ள கார்ஷி என்ற கிராமத்தில் உள்ள கேசவ் ஷிண்டே என்ற விவசாயியின்... மேலும் பார்க்க

``திருமணத்தில் அசைவ உணவு, மது கூடாது'' - ஆடம்பரத்துக்கு தடை விதித்த கிராம மக்கள் - எங்கு தெரியுமா?

கிராமப் பெரியவர்கள் தீர்மானம்திருமணம் என்றாலே இப்போது கோடிகளில் செலவு செய்வது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக பணக்காரக் குடும்பங்களில் திருமண விழா நடத்தும் போது, ஆடம்பரமாக கோடிகளைச் செலவழிப்பது உறுதியே.... மேலும் பார்க்க

எலுமிச்சை பழத்தில் ஏறியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார் - என்ன நடந்தது?

புதிய கார் அல்லது வாகனம் வாங்கினால் அதனை கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கம். சிலர் வாகனம் வாங்கியவுடன் அதனை முதலில் எலுமிச்சம்பழத்தின் மீது ஏற்றுவதை சம்பிரதாயமாக வைத்துள்ளனர். டெல்லியில் ... மேலும் பார்க்க

``தந்தையின் சொத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்'' - கரிஷ்மா கபூரின் குழந்தைகள் கோர்ட்டில் வழக்கு

பிரியா சச்சிதேவ்பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மரணத்தால் அவர் விட்டுச்சென்ற சொத்திற்கு மனைவிகளிடை... மேலும் பார்க்க

தனிமையை போக்க `காதலரை வாடகைக்கு' எடுத்த பெண் - ஜப்பானில் பிரபலமாகும் கலாசாரம்; பின்னணி என்ன?

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் உறவுகளை தக்கவைக்கும், மேம்படுத்தும் செயல்களில் பல சவால்கள் உள்ளன. இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘காதல் தொடர்புகள்’ உருவாக்கும் கலா... மேலும் பார்க்க