செய்திகள் :

ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணியில் மாற்றம்!

post image

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அபு தாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதவுள்ளன.

இலங்கை அணியில் மாற்றம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் ஜனித் லியாநாகே கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி விவரம்

சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, கமில் மிஷாரா, தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, நுவான் துஷாரா, மதீஷா பதிரானா.

வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி இலங்கை அணி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

There have been change to the Sri Lanka squad for the Asia Cup cricket series.

இதையும் படிக்க: 6 வாரங்களுக்கு பந்துவீச மாட்டேன்: பாட் கம்மின்ஸ்

ஆசிய கோப்பை: பவர் பிளே ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்டி இந்திய அணி அபாரம்!

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஆடவர் அணி.ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அடுத்த... மேலும் பார்க்க

இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்... மேலும் பார்க்க

உலகை வெல்லும் முன்பு ஆசியாவை வெல்வோம்: சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பாக ஆசியக் கோப்பையை வெல்வோம் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அபு தாபி... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தரவரிசை வெளியீடு; இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோ... மேலும் பார்க்க

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொட... மேலும் பார்க்க