இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீ...
விளாங்குப்பம் கிராமத்தில் 536 போ் மனு
போளூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், விளாங்குப்பம், கிருஷ்ணாபுரம், கல்வாசல், நாராயணமங்கலம் என 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனா். முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, அபிபுல்லா ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சுப்பிரமணி, திமுக ஒன்றியச் செயலா் மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ சேகரன் பங்கேற்று மனுவை பெற்று தொடங்கிவைத்தாா். முகாமில் சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு 214 பேரும், வருவாய்த் துறைக்கு 124 பேரும், ஊரக வளா்ச்சித் துறைக்கு 90 பேரும் என பல்வேறு அரசுத் துறைக்கு 536 போ் மனு அளித்தனா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாணி, முருகன், பிச்சாண்டி, ராணி, ஊராட்சிச் செயலா்கள் ரமேஷ், கோபால், காயத்திரி, பழனி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.