நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
ஆர்வமூட்டும் கைதி மலேசிய ரீமேக் டீசர்!
கைதி திரைப்படத்தின் மலாய் மொழி ரீமேக் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தி கூட்டணியில் வெளியான கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்தைத் தொடர்ந்தே, விக்ரம் படத்திலிருந்து லோகேஷ் எல்சியூ என்கிற பாணியைக் கொண்டுவந்தார்.
தற்போது, கைதி - 2 திரைப்படத்தின் பணிகளும் துவங்கியுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, மலேசியாவில் கைதி திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலாய் மொழியில் உருவான இப்படத்திற்கு, ‘பந்துவான்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆரோன் அஸிஸ் நாயகனாக நடிக்க க்ரோல் அஸ்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் மலேசியாவின் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படம் வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். சில ஆக்சன் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதால் கைதி ரசிகர்கள் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர்!