தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
குடியரசு துணைத் தலைவர் தோ்வு பாஜகவினர் கொண்டாட்டம்!
குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டதையடுத்து கரூரில் பாஜகவினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் கரூா் மாவட்ட பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினா்.