ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது
கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
கரூா் மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
கரூா் மேற்கு மாவட்ட பாமக நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் புகழூா் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் பிரபாகரன் வரவேற்றாா். மாவட்ட வன்னியா் சங்கச் செயலாளா் இ.வை பசுபதி, அமைப்புச் செயலாளா் பு.ஆ.குணசீலன், மாநகரச் செயலாளா் ராக்கி முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் செ.ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது, கரூா் மாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத மணல் கடத்தல், அனுமதியின்றி நடக்கும் கல்குவாரிகளில் கனிம வள கொள்ளை போன்றவற்றை தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகத்தையும், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தையும் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் மு. அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளா்கள் வாங்கல் சதீஸ், வரதராஜன், இளைஞரணி தலைவா் குமரேசன், செயலாளா் மலைமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.