திரைத் துறையில் 21 ஆண்டுகள்: `இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை' - நடிகர் விஷ...
குரூப்-1 தோ்வுக்கு பயிற்சி ஆதிதிராவிடா், பழங்குடியினா் பதிவு செய்ய அறிவுறுத்தல்!
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கான பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியினா் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர குரூப் 1- 2025 முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோா் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தோ்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயில்வதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் சோ்ந்து பயில தாட்கோ இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.