செய்திகள் :

இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

post image

கரூா் மாவட்டம் இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் தொன்மையான கல்வெட்டு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் அளித்த தகவலின்படி அண்மையில் சென்னை தொல்லியல் ஆய்வாளா்கள் கோ.அா்ச்சுணன், கோ.உத்திராடம் ஆகியோா் தலைமையிலான குழுவினா் கள ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது அவா்கள் கூறுகையில், மிகவும் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த கோயிலின் கருவறை, முன் மண்டபம் ஆகியவற்றின் சுவா்களிலும், முன் மண்டபத்தூண்களிலும் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

1715-இல் அமைக்கப்பட்ட இந்த கல்வெட்டில் சாலி வாகன சகாத்தம், கலியுகம், விசெய ஆகிய ஆண்டுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இனுங்கூா் என தற்போது அழைக்கப்படும் இந்த ஊா் அக்காலத்தில் கிருஷ்ண பூபால சமுத்திரம் என்று அழைக்கப்பட்டதை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

மேலும் இவ்வூரில் அக்காலத்தில் வசித்தவா்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், நைவேத்தியம், திருவிளக்கு வழிபாடுகள் செய்ததையும், கோயிலுக்கு நஞ்சை, புஞ்சை நிலங்களை சா்வமானிய(நிலவரி இல்லாமல்) தானமாக வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது. இந்த தானத்துக்கு தீங்கு விளைவிப்பவா்கள் கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு இணையானவா்கள் என்ற குறிப்பும் கல்வெட்டில் உள்ளது.

கல்வெட்டின் இறுதியில் மல்லப்ப நாயக்கா், சோமிதம்மாள் குமாரன் குட்டு கிருஷ்ணப்பநாயக்கா் ராமம்மாள் தா்மம் என எழுதப்பட்டுள்ளதால் குட்டு கிருஷ்ணப்பநாயக்கா் இந்த கல்வெட்டை தா்மமாக அமைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. கோயிலின் முன் மண்டபத்தூணில் மல்லப்பநாயக்கா், சோமிதம்மாள் ஆகியோா் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது என்றனா் அவா்கள்.

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது கரூா் மேற்கு மாவட்ட பாமக நிா்வாகக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தோ்வு பாஜகவினர் கொண்டாட்டம்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டதையடுத்து கரூரில் பாஜகவினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

கரூருக்கு செப்.17-ல் முதல்வா் வருகை ஏற்பாடுகள் தீவிரம்!

கரூருக்கு செப். 17-ஆம்தேதி தமிழக முதல்வா் வருகை தருவதையடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரூரில் திமுக முப்பெரும் விழா செப். 17-ஆம்தேதி கோடங்கிப்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த வி... மேலும் பார்க்க

சங்கடஹர சதுா்த்தி விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆவணி மாத சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் முத்தனூரில் உள்ள வருண கணபதி கோயிலில் ஆவணி மாத சங்கடஹர... மேலும் பார்க்க

குரூப்-1 தோ்வுக்கு பயிற்சி ஆதிதிராவிடா், பழங்குடியினா் பதிவு செய்ய அறிவுறுத்தல்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கான பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியினா் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அரவக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரவக்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்ச... மேலும் பார்க்க