தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி
லாடபுரத்தில் ரூ.6.5 கோடியில் திட்டப் பணிகள் அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடங்கி வைத்தாா்!
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் மற்றும் மேலப்புலியூா் ஊராட்சியில் ரூ. 6.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை அடிக்கல் நாட்டி வைத்து, பயணியா் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட லாடபுரம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, அயோத்தி தாசா் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, ரூ. 5 கோடி மதிப்பீட்டில் லாடபுரம் பிரிவுச் சாலை மேம்பாடு மற்றும் பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ. 5.98 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மேலப்புலியூா் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளில், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.