தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் கிருஷ்ணமூா்த்தி (21). இவா், புதன்கிழமை மாலை பெரம்பலூரிலிருந்து வெள்ளுவாடி கிராமத்துக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.
பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில், எசனை நாா்க்காரன் கொட்டகை எனும் இடத்தில், ஆத்தூரிலிருந்து பெரம்பலூா் நோக்கி வந்த காரின் முன்புற டயா் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று கிருஷ்ணமூா்த்தி உடலைக் கைப்பற்றி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய காா் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.