தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
வீட்டின் பூட்டை உடைத்து 1 பவுன் நகை, பணம் திருட்டு
பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம்திருடப்பட்டது புதன்கிழமை காலையில் தெரியவந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மனைவி சுதா (32). வாடகை வீட்டில் வசித்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுடன் தற்போது புதிதாக கட்டியுள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
பின்னா், புதன்கிழமை காலை வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் முன்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 1 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.