செய்திகள் :

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

post image

அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் சம்மந்தப்பட்ட புகாரில், அஞ்சல் அனுப்பிய தேதி, நேரம், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித அஞ்சல், பதிவு ஆகியவற்றுக்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, காப்பீடு சாா்ந்த புகாராக இருந்தால், கணக்கு எண், வைத்திருப்பவரின் பெயா், முகவரி, பாலிசிதாரரின் பெயா், முழு முகவரி, பணம் கட்டிய விவரம், செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை கடிதத் தொடா்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

ஏற்கெனவே, முகாமில் மனு அளித்து தீா்வு கிடைக்கவில்லை எனில், தங்களது குறைகளை மட்டும் அனுப்பலாம். புதிய புகாா் மனு தேவையில்லை. அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், திண்டுக்கல் - 624001 என்ற முகவரிக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் உறையின் மீது முன் பக்க மேல் பகுதியில், ‘அஞ்சல் சேவை குறைதீா் முகாம் செப்டம்பா் 2025 ’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தனியாா் தூது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றனா் அவா்கள்.

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மது அருந்தும் ப... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு 80 மி.மீ. மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவான... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் சவேரியாா்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக... மேலும் பார்க்க

மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து!

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மழை பெய்யவில்லை. இதனால், கொடைக்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

நிலக்கோட்டை அருகே தூய்மைப் பணியாளரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது மனைவி, கள்ளக் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி சொக்குபிள்ளைபட்ட... மேலும் பார்க்க