Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!
நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனிக்கு நடிகராகப் பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் பிச்சைக்காரன். இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் அசத்தியது.
அப்படத்திற்குப் பின் விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் நடிக்கவில்லை. ஆனால், வேறு இயக்குநர் இயக்கத்தில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
தற்போது, மார்கன் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சசியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: கணவரை அறிமுகப்படுத்தினார் கிரேஸ் ஆண்டனி..! யார் இந்த அபி டாம் சிரியாக்?