நடிகர் கதிரின் மீஷா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
நடிகர் கதிர் மலையாளத்தில் அறிமுகமான மீஷா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் படங்களின் மூலம் நாயகனாக கவனிக்கப்பட்டவர் நடிகர் கதிர். சில மாதங்களுக்கு முன் வெளியான சுழல் - 2 இணையத் தொடரிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.

தற்போது, சில படங்களில் நாயகனாகவும் பிரதான பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் கதிர் மீஷா என்ற மலையாளப் படத்தில் நடித்து, இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் அறிமுகமானார்.
எம்சி ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் டைம் ஷாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மீஷா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது
இந்த நிலையில், மீஷா திரைப்படம் வரும் செப். 12 ஆம் தேதி ஆஹா தமிழ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
இதையும் படிக்க: திருமண உதவித் திட்டங்கள்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர்!