திருமணம் எப்போது? அதர்வா பதில்!
நடிகர் அதர்வா தன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதர்வா நடிப்பில் இறுதியாக வெளியான டிஎன்ஏ திரைப்படம் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. பல ஆண்டுகள் கழித்து அதர்வாவுக்கு வெற்றியைக் கொடுத்து மீண்டும் அவருக்கான மார்க்கெட்டையும் வழங்கியது.
தற்போது, அதர்வா நடிப்பில் உருவான தணல் திரைப்படம் செப்.12 திரைக்கு வருகிறது. இது, கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தணல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அதர்வாவிடம், “நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ளார். அவரைத் தொடர்ந்து உங்களுக்கும் திருமணம் நடக்கும் என்றார். நீங்கள் எப்போது திருமணம் செய்ய உள்ளீர்கள்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அதர்வா, “விஷாலுக்கு திருமணம் முடிந்ததும் எனக்கு நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!