செய்திகள் :

Sivakarthikeyan: ரூ1000 கோடி வசூல்? ``வட இந்தியாவைப் போல டிக்கெட் விலை இருந்தால்" - சிவகார்த்திகேயன்

post image

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி.

இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``ரூ.1000 கோடி என்ற இலக்கை மட்டும் மனதில் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது."

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

நான் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறேன். நாங்கள் 'அமரன்' திரைப்படத்தைத் தயாரிக்கும்போது, அது எவ்வளவு வசூல் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை.

ஒரு படத்தின் தரத்தைத் தவிர, டிக்கெட் விலையைப் போன்ற வேறு சில காரணிகளும் இதில் முக்கியம். நான் டிக்கெட் விலையை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லை.

ஆனால், பெங்களூரு அல்லது மும்பையில் உள்ள டிக்கெட் விலைகள் போல் இங்கே இருந்திருந்தால், 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.800 கோடி அல்லது ரூ.1000 கோடியைக் கூட எளிதாகக் கடந்திருக்கும்.

தமிழ் சினிமா வட இந்திய சந்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் நான்கு வாரங்களுக்கான ஓடிடி ஒப்பந்தத்தைச் செய்கின்றன.

ஆனால், மும்பையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இந்தச் சிக்கலால், 'அமரன்' திரைப்படம் வட இந்தியாவில் பரவலாகச் சென்றடையவில்லை. தமிழ் திரையுலகம் விரைவில் அந்த இலக்கை எட்டும்.

ஒருவரால் மட்டும் இதைச் செய்வது எளிதல்ல. ஆனால், தமிழ் சினிமா அந்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வருடங்களில் ரூ.1000 கோடி வசூல் என்ற சாதனை நிகழும் என்றும் நம்புகிறேன்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'அப்படிப்பட்ட படங்களும் இயக்குநர்களும்தான் கொண்டாடப்படுறாங்க' - தங்கர் பச்சன்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுக... மேலும் பார்க்க

தனுஷின் 'கொடி' திட்டம்; 'இட்லி கடை' வெளியீட்டில் 'இன்பனு'க்காக காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

நடிகர் தனுஷின் 'இட்லி கடை' படத்தின் இசைவெளியீட்டு விழா இந்த வாரம் சென்னையில் நடக்கிறது. வரும் அக்டோபர் முதல் தேதியில் படம் திரைக்கு வருவதால் டப்பிங் மற்றும் நிறைவு கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபர... மேலும் பார்க்க

Kajal Agarwal: ``பொய்; நம்ப வேண்டாம்'' - விபத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்திகள் குறித்து, `அவர் நலமுடன் இருப்பதாகவும், யாரும் ஆதாரமில்லாத பொய்களை நம்ப வேண்டாம்' என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.சமீப நாள்களில் சமூக வலைத்... மேலும் பார்க்க

படையாண்ட மாவீரா: "ரஜினி காந்த் வாழ்த்தினால் படம் ஓடிவிடுமா?" - கவிஞர் வைரமுத்து சொல்வது என்ன?

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுக... மேலும் பார்க்க