செய்திகள் :

Kajal Agarwal: ``பொய்; நம்ப வேண்டாம்'' - விபத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்

post image

நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்திகள் குறித்து, `அவர் நலமுடன் இருப்பதாகவும், யாரும் ஆதாரமில்லாத பொய்களை நம்ப வேண்டாம்' என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீப நாள்களில் சமூக வலைத்தளங்களில் நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி தீவிர காயங்கள் அடைந்திருப்பதாக வதந்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் ஆன்லைனில் ஆதரவும், பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தினர்.

Kajal Agarwal
Kajal Agarwal

இறுதியில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மூலம் காஜல் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Kajal Agarwal விளக்கம்

"நான் விபத்தில் சிக்கிவிட்டதாகவும் (இறந்துவிட்டதாகவும்) சில ஆதாரமற்ற செய்திகள் பரவின. ஆனால் அதில் ஒரு துளியும் உண்மை இல்லை.

கடவுள் கருணையால், நான் மிகவும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

எனவே, பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். பாசிட்டிவான, உண்மையான விஷயங்களில் கவனம் செலுத்துவோம்" என காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

காஜல்

காஜல் அகர்வால் இந்த ஆண்டு சிக்கந்தர் மற்றும் கண்ணப்பா படங்களில் தோன்றியிருந்தார். தொடர்ச்சியாக, அவரது நடிப்பில் கமல் ஹாசனின் இந்தியன் 3 படம் வெளி வரும் நிலையில் உள்ளது. மேலும், நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணா படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'அப்படிப்பட்ட படங்களும் இயக்குநர்களும்தான் கொண்டாடப்படுறாங்க' - தங்கர் பச்சன்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுக... மேலும் பார்க்க

தனுஷின் 'கொடி' திட்டம்; 'இட்லி கடை' வெளியீட்டில் 'இன்பனு'க்காக காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

நடிகர் தனுஷின் 'இட்லி கடை' படத்தின் இசைவெளியீட்டு விழா இந்த வாரம் சென்னையில் நடக்கிறது. வரும் அக்டோபர் முதல் தேதியில் படம் திரைக்கு வருவதால் டப்பிங் மற்றும் நிறைவு கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபர... மேலும் பார்க்க

படையாண்ட மாவீரா: "ரஜினி காந்த் வாழ்த்தினால் படம் ஓடிவிடுமா?" - கவிஞர் வைரமுத்து சொல்வது என்ன?

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுக... மேலும் பார்க்க

"வெளியாகும் 200 படங்களில் 190 படங்கள் தோல்வியடையக் காரணம் இதுதான்" - கவிஞர் வைரமுத்து ஆதங்கம்