செய்திகள் :

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

post image

வாரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,504.36 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 376.01 புள்ளிகள் அதிகரித்து 81,477.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 118.65 புள்ளிகள் உயர்ந்து 24,987.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு, இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

முதல் நாள் ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்ந்த நிலையில் நேற்று ஐடி பங்குகள் உயர்ந்தன.

இன்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தில் இருந்து வருகின்றன. ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக லாபத்தைச் சந்தித்து வருகின்றன.

எம்&எம், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எந்த சிரமமும் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதையடுத்து பங்குச்சந்தை நேர்மறையுடன் வர்த்தகமாகி வருகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கச்சா எண்ணெய் விலை 0.87% உயர்ந்து ஒரு பேரல் 66.95 டாலராக உள்ளது.

Sensex, Nifty jump in early trade amid hopes of successful conclusion in India-US trade talks

புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்!

யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் பைக்குகளை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது.யமஹா நிறுவனம் ஆர்15 வரிசையில் ஆர்15எம், ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எஸ் ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.இந்த ந... மேலும் பார்க்க

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

புதுதில்லி: வலுவான தொழில்துறை தேவை, பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பாதுகாப்பான காரணங்கள் உள்ளிட்டவையால் வரும் மாதங்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.5 லட்சமாக உயரக... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.88.12 ஆக முடிவடைந்ததது.இந்தியா மீதான அமெரிக்க வரிகள் மற்றும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் குறித்த கவ... மேலும் பார்க்க

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. முழுக்க முழுக்க கேமிங் பிரியர்களைக் கவரும் வகையிலான சிறப்பம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவ... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

மும்பை: இந்த மாத இறுதியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் வெகுவாக எதிரொலித்ததும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி பங்குகள் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனை ரூ. 40 ஆயிரத்துக்கு ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பெறலாம். கடந்த ஆண்டு கூகுள் பிக்சல் 9 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத சலுகை விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்க... மேலும் பார்க்க