செய்திகள் :

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

post image

விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

முழுக்க முழுக்க கேமிங் பிரியர்களைக் கவரும் வகையிலான சிறப்பம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவிலுள்ள கேம் பிரியர்களைக் கவரும் வகையில் விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன், 12GB உள் நினைவகம் 256GB நினைவகம் கொண்டது.

  • 6.67 அங்குல அமோலிட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. முழுக்க ஹெச்டி தரத்தில் 2800×1260 திறன் கொண்டது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 5000 nits திறன் உடையது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ 4nm புராசஸர் கொண்டது.

  • கேம் விளையாடும்போது வெப்பமாவதைக் குறைக்கும் வகையில், கூலிங் சேம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இதன் விலை ரூ. 38,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்ன பிற ஸ்மார்ட்போன்களும் கேம் பிரியர்களுக்கு உகந்தவையாக உள்ளன.

அவையாவன, ஓப்போ ரெனோ 14 5ஜி, விவோ வி 60 5ஜி, நத்திங் 3ஏ ப்ரோ 5ஜி, ரியல்மி ஜிடி 7 போன்றவை கேம் பிரியர்களுக்கு உகந்தவை.

இதையும் படிக்க | ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

Vivo T4 Ultra 5G India’s Best Gaming Smartphones Under Rs 40,000 in September 2025

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

புதுதில்லி: வலுவான தொழில்துறை தேவை, பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பாதுகாப்பான காரணங்கள் உள்ளிட்டவையால் வரும் மாதங்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.5 லட்சமாக உயரக... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.88.12 ஆக முடிவடைந்ததது.இந்தியா மீதான அமெரிக்க வரிகள் மற்றும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் குறித்த கவ... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

மும்பை: இந்த மாத இறுதியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் வெகுவாக எதிரொலித்ததும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி பங்குகள் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனை ரூ. 40 ஆயிரத்துக்கு ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பெறலாம். கடந்த ஆண்டு கூகுள் பிக்சல் 9 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத சலுகை விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்க... மேலும் பார்க்க

பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,904.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் க... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க