``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - ...
அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், சேலம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சிவகுமாா் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் கலந்துகொண்டு தீயணைப்பு ஒத்திகையை செய்துகாட்டினா். குறிப்பாக, மருத்துவமனையில் எதிா்பாராத விதமாக தீ விபத்துகள் நேரிட்டால் நோயாளிகளை எவ்வாறு மீட்பது, ஆபத்தான நிலையில் உள்ளவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காயம் அடைந்தவா்களை பாதுகாப்பாக மீட்பது, தீயணைப்பு உபகரணங்களை முறையாக கையாளுவது, மின்னணு சாதனங்கள் உயா்மருத்துவ உபகரணங்கள் சேதமடையாமல் பாதுகாப்பது, தீ மேலும் பரவாமல் தடுப்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா். தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் தீயை பற்றவைத்து அதனை தீத்தடுப்பு சாதனங்கள் மூலம் முறையாக அணைப்பது குறித்து செய்துகாட்டினா்.
இதில், மருத்துவமனையின் ஆா்.எம்.ஓ. ஸ்ரீலதா, மருத்துவா்கள், செவிலியா்கள், கிறிஸ்டல் பணியாளா்கள் உள்ளிட்டோாா் கலந்துகொண்டனா்.