செய்திகள் :

சென்னை: பைக் டாக்ஸி ஓட்டும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கல்லூரி மாணவன் கைதான பின்னணி என்ன?

post image

சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செல்ல முன்பதிவு ஒன்று வந்திருக்கிறது. உடனடியாக பைக் டாக்ஸி ஓட்டும் பெண், முன்பதிவு செய்த வாடிக்கையாளரை போனில் அழைத்திருக்கிறார்.

அப்போது எதிர்முனையில் பேசிய ஆண், தன்னுடைய அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண், முன்பதிவு செய்த லோக்கேஷனுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இளைஞர் ஒருவர் காத்திருந்தார். அவரிடம் உங்கள் அம்மா வரவில்லையா என்று பெண் டிரைவர் கேட்டிருக்கிறார்.

பைக் டாக்ஸி
பைக் டாக்ஸி

அப்போது அந்த இளைஞர், நான்தான் முன்பதிவு செய்தேன். எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது. அதனால் என்னை கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் செல்ல முடியுமா என அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதனால், அந்தப் பெண்ணும் இளைஞரை பைக்கில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்குச் சென்றிருக்கிறார்.

அரும்பாக்கம் பகுதியில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டு வந்த இளைஞர், திடீரென பைக்கை ஓட்டிய பெண்ணுக்குப் பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் டிரைவர், பைக்கை நிறுத்தி விட்டு ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என இளைஞரிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த இளைஞர், நான் என்ன செய்தேன் என அந்தப் பெண் டிரைவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். நடுரோட்டில் இவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தைச் சிலர் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பெண் டிரைவர், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப்பிறகு அமைந்தகரையைச் சேர்ந்த இம்ரான் (19) என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இம்ரான், ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை: கணவருக்குத் தெரியாமல் கடன்; நகைக்கடையில் திருட வந்த குடும்பத் தலைவி... கைதுசெய்த போலீஸ்!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் குடியிருந்து வருபவர் தேவராஜ் ஜெயின் (54). இவர் அந்தப்பகுதியில் தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம் தேவராஜ் ஜெயி... மேலும் பார்க்க

சென்னை: கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடிய வடமாநில இளைஞர் - நெல்லூரில் சிக்கிய பின்னணி!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டிச் செல்ல டிரைவரும் கண்டக்டரும் நேற்று (11.9.2025) வந்தனர். அப்போது அங்கு பேருந்து இல்... மேலும் பார்க்க

பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). சமூக ஆர்வலரான இவர், அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்கு புதன்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்... மேலும் பார்க்க

கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்தவர் முகில் ராஜ். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய இ... மேலும் பார்க்க

Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்த கொடூரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அபார்ட்மெண்டின் 13வது மாடியில் வசித்தவர் ரேணு அகர்வால்(50). இவரது கணவர் ராகேஷ். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். ராகேஷும், அவரது மகனும் காலையில்... மேலும் பார்க்க

”நல்ல வாழ்க்கை அமையவில்லை; நாம் ஏன் வாழணும்?”- குழந்தைகளுடன் தவறான முடிவு எடுத்த சகோதரிகள்!

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண... மேலும் பார்க்க