மீண்டும் தேசிய விருது கிடைக்குமா? நித்யா மெனனின் இட்லி கடை போஸ்டர்!
இட்லி கடை படத்தில் நடிகை நித்யா கதாபாத்திர போஸ்டர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் படம் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
நடிகர் தனுஷ் எழுதி இயக்கியுள்ள இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் தனுஷுடன் அருண் விஜய், பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
திருச்சிற்றம்பலம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நித்யா மெனன் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். இதனால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ’கயல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தனுஷ் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்துக்கு நித்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது. மீண்டும் இட்லி கடை பத்தில் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
The talented @MenenNithya as Kayal pic.twitter.com/o3chjUE9T7
— Dhanush (@dhanushkraja) September 11, 2025