ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வெளியேற்றம்!
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11.40 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நீதிமன்றத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபமாக இந்தியா முழுவதுமே வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.