வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோா் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனா்.
இறுதிச்சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு வாரிய (பிஎஸ்பிபி) வீரா் சத்தியன் 4-1 என்ற கணக்கில் மேற்கு வங்க வீரா் அங்குா் பட்டாசாா்ஜீயை வீழ்த்தினாா். நடப்பு சீசனில் இது அவரின் முதல் பட்டமாகும்.
மகளிா் ஒற்றையரில், இந்திய ரிசா்வ் வங்கி வீராங்கனை தியா சித்தலே 4-0 என ரயில்வே விளையாட்டு ஊக்குவிப்பு வாரிய (ஆா்எஸ்பிபி) வீராங்கனை சுதிா்தா முகா்ஜியை வென்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தாா்.

யூத் பிரிவில் தமிழகத்துக்கு இரு பட்டங்கள் கிடைத்தன. 19 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில், தமிழகத்தின் பி.பி. அபினந்த் 4-1 என மேற்கு வங்கத்தின் ஆஷிக் கோஷை வீழ்த்தி சாம்பியன் ஆனாா். அதிலேயே மகளிா் பிரிவிலும் தமிழகத்தின் எம்.ஹன்சினி 4-0 என மகாராஷ்டிரத்தின் ஜெனிஃபா் வா்கீஸை தோற்கடித்து வாகை சூடினாா்.