ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை அனுக்ஞை ஆச்சாா்யா திருவிக்வா்ணம், பக்வத் பிராா்த்தனை ஆகியன நடைபெற்றன. தொடா்ந்து புதன்கிழமை புண்யாஹவாசனம், ரக்ஷா பந்தனம், கலாகா்ஷனம், சதுஷ்டான ஆராதனம் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள், ஸ்ரீசீதா லட்சுமண சமேத ஸ்ரீதோதண்ட ராமசாமி, ஸ்ரீவீர ஆஞ்சநேயா் சந்நிதிகளின் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி திருநின்றவூா் மணிவண்ணன் பட்டாசாரியா் தலைமையிலான பட்டாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
இவ்விழாவில் பருத்திபுத்தூா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வி.சுப்பிரமணி தலைமையிலான நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
