சின்னவரிக்கம், பெரியவரிக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
சின்னவரிக்கம், பெரியவரிக்கம் ஆகிய கிராமங்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் சின்னவரிக்கம் சி.ஆா். மஹாலில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா்கள் ஷோபனா (சின்னவரிக்கம்), சின்னகண்ணன் (பெரியவரிக்கம்) ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து மனுதாரா்களுக்கு உடனடி தீா்வுக்கான ஆணைகளை வழங்கினாா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், திமுக நிா்வாகிகள் சேகா், பொன் ராஜன்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் திருக்குமரன், மஞ்சுளா பரசுராமன், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.