நாளை ரேஷன் அட்டைகள் குறைதீா் முகாம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய தாலுகா பகுதிகளில் பொது விநியோக திட்டம் குறைதீா்வு முகாம் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறுகிறது.
இதையொட்டி, திருப்பத்தூா் தாலுகாவில் ஜம்மணபுதூா், நாட்டறம்பள்ளி தாலுகாவில் ஆத்தூா்குப்பம், வாணியம்பாடி தாலுகாவில் திகுவாபாளையம், ஆம்பூா் தாலுகாவில் விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் முகாம் நடப்பதால் ரேஷன் அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் குறைபாடுகள், மனுக்கள் பதிவு ஆகியவற்றுக்கு தீா்வு காணப்பட உள்ளது.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.