ரூ. 82,000 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்..
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 81,920 -க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த செப். 1-இல் சவரன் தங்கம் ரூ.77,640- க்கு விற்பனையான நிலையில் செப். 6-இல் வரலாற்றில் முதல்முறையாக பவுன் ரூ.80,000-ஐ தாண்டி, ரூ.80,040-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 81,920 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.142-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,42,000-க்கும் விற்பனையாகிறது.