கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீா் சோதனை
ஆம்பூரில் கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
ஆம்பூா் ஜலால்ரோடு பகுதியில் உள்ள ஒரு கணக்கு தணிக்கையாளா் அலுவலகத்துக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினா் திடீரென வருகை தந்து சோதனை நடத்தினா். சென்னை, ராணிப்பேட்டை, வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினா் கணக்கு தணிக்கையாளரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் தனித்தனியாக சோதனை நடத்தினா்.
ஜிஎஸ்டி வரி முறைகேடு சம்பந்தமாக சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.