செய்திகள் :

போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்

post image

போலந்து எல்லைக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் நுழைந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷிய ட்ரோன்கள் போலந்து நாட்டுக்குள் நுழைந்தது.

இதையடுத்து ரஷிய ட்ரோன்களை போலந்து ராணுவம் சுட்டு வீழ்த்தின. நேட்டோவின் உறுப்பினர் நாட்டுக்குள் ட்ரோன்களை அனுப்பிய ரஷியாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று போலந்தும் உக்ரைனும் நேட்டோ அமைப்பை வலியுறுத்தியுள்ளன.

மேலும், நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 4 -ஐ செயல்படுத்துவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார். இந்த பிரிவு நேட்டோ அமைப்பை கூட்டி உறுப்பு நாட்டின் பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்கிறது.

இதனிடையே, நேட்டோவின் வான் எல்லையைப் பாதுகாப்பதற்காக 3 ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் அரசு அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப் கூறியதாவது:

"இது தவறுதலாக நடந்திருக்கலாம். இருப்பினும், இந்த சூழலைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாட்டின் மீதான தாக்குதலோ போர் நடவடிக்கையோ, ஒட்டுமொத்த நேட்டோ அமைப்பின் மீதான செயல்பாடாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற துணை அதிபர்!

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுமந்துசென்றார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்ப... மேலும் பார்க்க

அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வசித்துவரும் அரசினா் மாளிகையில் இருந்து அவா்... மேலும் பார்க்க

மீண்டும் நிதா்சனத்தை நிரூபித்த கத்தாா் தாக்குதல்

கத்தாரில் அமெரிக்காவின் புதிய போா் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவா்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவ... மேலும் பார்க்க

சீனா்களுக்கு நாசா தடை

சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது.இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள் தங்களத... மேலும் பார்க்க

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை: அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள சொ்ஜியோ கோா்

‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவுள்ள சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அவா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க