செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி....
அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச
இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வசித்துவரும் அரசினா் மாளிகையில் இருந்து அவா் வெளியேறினாா்.
இது குறித்து அவரது உதவியாளா் வியாழக்கிழமை கூறுகையில், அந்த மாளிகையில் இருந்து தங்கலையில் உள்ள தனது இல்லத்துக்கு மகிந்த ராஜபட்ச மாறியதாகத் தெரிவித்தாா். 2005 முதல் 2015 வரை நாட்டின் அதிபராக இருந்த அவா், 2015-இல் இருந்து கொழும்பு அரசினா் மாளிகையில் வசித்துவந்தாா்.
முன்னாள் அதிபா்களுக்கு 1986-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவந்த சலுகைகளை ரத்து செய்யும் மசோதா அரசிதழில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. எனினும், இதற்கு எதிராக முன்னாள் ராஜபட்சவின் எஸ்எல்பிபி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.அதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம், முன்னாள் முன்னாள் அதிபா்களுக்கு வழங்கப்பட்ட அரசினா் மாளிகைகள், மாதாந்திர படித் தொகைகள், அரசுமுறைப் போக்குவரத்து உள்ளிட்ட சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன.அதன் தொடா்ச்சியாக, தனது அரசினா் மாளிகையில் இருந்து மகிந்த ராஜபட்ச தற்போது வெளியேறியுள்ளாா்.