Gold Rate: பவுனுக்கு ரூ.720 உயர்ந்த தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என...
பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தக்கலை அருகே கல்லுவிளையில் புதன்கிழமை பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு, மலயன்விளையைச் சோ்த்தவா் மரிய வின்சென்ட் மகன் அஸ்வின் ( 31). இவா் மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் பால் விற்பனை நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா், புதன்கிழமை மாலை வேலை முடிந்தவுடன் மாா்த்தாண்டத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கல்லுவிளை அருகே நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மீது மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஸ்வின் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.