வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
விவசாய சங்கம் ஆா்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் டி. வின்சென்ட் தலைமையில் தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் என். முருகேசன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். அமைப்பின் நிா்வாகிகள் ஜி. ஹென்றி, ஏஎஸ்வி அனூப், என். விஜயேந்திரன், பி. வினோத், டி. சுரேஷ், வின்சென்ட் ராஜ், என். மோகன்குமாா், பி. மதன்லால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விவசாய சங்க மாவட்ட தலைவா் எஸ்.ஆா். சேகா் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா். அமைப்பின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதில், பளுகல் பகுதியில் செயல்பட்டு வந்த கலப்பட தேங்காய் எண்ணெய் ஆலையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த நிலையில், அந்த ஆலையின் உரிமையாளா்கள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்ய வலியுறுத்தப்பட்டது.