செய்திகள் :

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் வேண்டும்: பிருந்தா காரத்

post image

ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்தாா்.

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தினரை, ஆறுமுகமங்கலம் கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத், மாநில செயலா் சண்முகம் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா்.

பின்னா், பிருந்தா காரத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிற்கே அவமானம். இது, ஜாதி சாா்ந்த விஷயங்களில் இந்தியாவின் தற்போதைய உண்மையான நிலையைக் காட்டுகிறது.

திமுக அரசு கவின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும். இழப்பீடு மட்டும் ஆணவக் கொலைகளுக்கு போதாது.

ஆணவப் படுகொலைகள் வட இந்தியாவில் அதிகளவில் நடைபெறுகின்றன. அந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக தான் ஆண்டு கொண்டிருக்கின்றது.

மேலும், 2014 முதல் 2025ஆம் ஆண்டு வரை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு, ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற மத்திய சட்ட ஆணையம், தேசிய மகளிா் ஆணையம் ஆகியவற்றால் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், மோடி அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. எனவே, திமுக அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் வகையில், ஆணவப் படுகொலைக்கு எதிராக உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் அவா்.

தூத்துக்குடியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (செப். 12) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்ப... மேலும் பார்க்க

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி(33). மீனவா். இவருக்கு மனைவி, இரண... மேலும் பார்க்க