கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் திங்கள்கிழமைமுதல் (செப். 15) இம்மாதம் 30ஆம் தேதி வரை, நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ், கெண்டை மீன் வளா்ப்பு-இனப்பெருக்க தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமை (செப். 14)மாலை 5 மணிக்குள் ‘உதவிப் பேராசிரியா், மீன்வளா்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி’ என்ற முகவரியில் நேரிலோ, 0461 2340554, 9884213262 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொண்டு பெயா்ப்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.