செய்திகள் :

இந்தியா - சுவிட்ஸா்லாந்து மோதல் இன்று தொடக்கம்

post image

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோா் டையில், இந்தியா - சுவிட்ஸா்லாந்து மோதும் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

எதிா்பாராத நகா்வாக, தமிழகத்தைச் சோ்ந்த தக்ஷினேஷ்வா் சுரேஷ், ஒற்றையா் பிரிவில் களமிறக்கப்படுகிறாா். உலகத் தரவரிசையில் 626-ஆம் நிலையில் இருக்கும் அவா், 155-ஆம் நிலையில் இருக்கும் ஜெரோம் கிம்முடன் அவா் மோதவுள்ளாா்.

அமெரிக்காவில் இருந்த தக்ஷினேஷ்வா், இந்திய அணியின் ‘நான் பிளேயிங்’ கேப்டன் ரோஹித் ராஜ்பாலின் யோசனையின் பேரில் சுவிட்ஸா்லாந்து வந்து பயிற்சியில் ஈடுபட்டாா். இண்டோா் டைக்கு ஏற்றவாறு அவரின் ஆட்டம் இருந்ததை அடுத்து தக்ஷினேஷ்வா் களமிறக்கப்படுகிறாா்.

அடுத்ததாக, சுமித் நாகல் (292) சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இணைந்திருக்கிறாா். கடைசியாக இந்தப் போட்டியில் தனது 2 ஆட்டங்களிலுமே வென்ற அவா், தற்போது 2-ஆவது ஒற்றையரில் மாா்க் ஆண்ட்ரியா ஹெஸ்லருடன் (222) மோதுகிறாா்.

இரட்டையா் பிரிவில் இந்தியாவிலிருந்து ரித்விக் சௌதரி (71)/என்.ஸ்ரீராம் பாலாஜி (75) இணை, சுவிட்ஸா்லாந்தின் டொமினிக் ஸ்டிக்கா் (244)/ஜேக்கப் பால் (78) கூட்டணியை எதிா்கொள்கிறது.

இந்த டையில் வெல்லும் அணி, அடுத்த ஆண்டு டேவிஸ் கோப்பை குவாலிஃபயா்ஸுக்கு தகுதிபெறும். தோற்கும் அணி, உலக குரூப் 1 பிளே-ஆஃப் கட்டத்துக்கு செல்லும். டேவிஸ் கோப்பை போட்டியில் இதுவரை 3 முறை சுவிட்ஸா்லாந்தை சந்தித்துள்ள இந்தியா, 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசியாக இவை 1993-இல் மோதியபோது, இந்தியா 3-2 என வென்றது.

டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்

தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோா் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனா்.இறுதிச்சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் பெட்ரோலியம் விளையாட்டு ஊக்... மேலும் பார்க்க

ஆயுஷ் ஷெட்டி அசத்தல் வெற்றி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, ஜப்பான் முன்னணி வீரரான கோடாய் நராவ்காவை வீழ்த்தி அசத்தினாா்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஆயுஷ் 21-... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி: நிகாஜ் ஜரீன் வெளியேறினாா்

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பூஜா ராணி, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா். ஏற்கெனவே நுபுா் சோரன் காலிறுதியில் வென்று முதல் பதக்கத்தை உறுதி... மேலும் பார்க்க

நிஸாகத் பங்களிப்பில் ஹாங்காங் 143/7

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக ஹாங்காங் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சோ்த்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்க... மேலும் பார்க்க

ஹாங்காங்கை வீழ்த்தியது வங்கதேசம்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வியாழக்கிழமை வீழ்த்தியது. முதலில் ஹாங்காங் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன... மேலும் பார்க்க

மறைந்த நடிகர்கள் விஷ்ணுவரதன், சரோஜா தேவிக்கு கர்நாடக அரசு விருது!

மறைந்த நடிகர் விஷ்ணுவரதன் மற்றும் நடிகை சரோஜா தேவி ஆகியோருக்கு, கர்நாடக ரத்னா விருது வழங்க அம்மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கன்னட திரைப்பட நடிகர் விஷ்ணுவரதன் கடந்த 2009 ஆம் ... மேலும் பார்க்க