`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
குழித்துறையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க முடிவு
நாகா்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பில் பயணிகள் நிழலகம் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். நகராட்சி உறுப்பினா்கள் , மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, பயணிகள் நிழலகம் அமைக்க நகராட்சி சாா்பில் ரூ. 8 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து பயணிகள் நிழலகம் அமைய உள்ள பகுதியில் நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், நகராட்சி பொறியாளா் குசெல்வி, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் பிரவின்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் வி. விஜூ, மினிகுமாரி, ஜெயின்சாந்தி உள்ளிட்டோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.