செய்திகள் :

தெரு நாய்கள் நகரத்தின் ரகசியக் கவிஞர்கள்! - தேசாந்திரி பெண்ணின் பார்வை #Straydogissue

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நகரத்தின் விளக்குகளுக்குள் நிழல்போலச் சுற்றி நடமாடும் உயிர்கள் தெருநாய்கள்..தெரு நாய்களை நான் “சிறு நாய்” என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். அவர்கள் என் கண்களில் கடவுளை விட மேலானவர்கள். அவர்களின் பாசம் எந்த விலையாலும் வாங்க முடியாதது.

பிச்சைக்காரனோ, ஏழையோ, தனிமையில் தவித்தோரை பார்த்து கூட அவை தலையை மடியில் வைத்து ஆறுதல் தரும் தன்மை உடையவை. அந்த அன்பு எதுவும் எதிர்பார்க்காத அன்பு. சிறு வயதிலிருந்தே நாய்கள் எனக்கு மிகுந்த பாசமூட்டியவைகள்.

குட்டிப் போட்ட நாய் குட்டியை தாய்ப்பாசத்துடன் பாதுகாப்பது போல, நானும் அந்த குட்டிகளை குடும்பத்தின் ஓர் அங்கமாகவே வளர்த்தேன்.எங்கள் வீட்டில் ஒரு காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் இருந்தன. அவை எல்லாம் தெருவிலிருந்து வந்தவை தான். ஆனால் மனிதர்களைப் போலவே வீட்டு உறுப்பினர்களாக நடந்துக் கொண்டன. “லட்சுமி” என்ற நாய் ஐந்து குட்டிகளைப் போட்டது. அதில் "மொட்டை அப்பு" என்ற நாய்க்குட்டி என்னை மிகுந்த பாசத்துடன் நேசித்தது. அதன் குட்டிகள் – பெரியக்கருப்பி, சின்னக்கருப்பி, சௌமியா – மூவரும் எங்கள் வீட்டில் பேரன்போடு வளர்ந்தனர். நான் ஸ்பூனில் உணவூட்டி, என் குழந்தைகளாக வளர்த்தேன். தெருநாய்கள் என்ற பெயரில் இருந்தாலும், அவை எல்லாம் என் குடும்பமே. அவற்றின் மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாய் அமைந்தது.

லெனின்,டெரி,ரோஸி,நிக்கித்தா,அம்பி,அந்நியன் போன்ற நாய்கள் இறந்தபோது, அது என் சொந்த ரத்தத்தை இழந்ததுபோல் வேதனை தந்தது. லெனினைத் தாலாட்டுப் பாடி தூங்க வைப்பது என் தினசரி பழக்கமாக இருந்தது.

பிறகு நான் வளர வளர, ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய நாய்கள் என் வாழ்க்கையில் வந்துக்கொண்டே இருந்தன. அவற்றில் சிலர் குறுகிய நாட்கள் வாழ்ந்தாலும், அவர்கள் தந்த அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. இன்றுவரை என் வாழ்க்கையில் தெருநாய்கள் தான் என் மிகப்பெரிய துணையர். இரவு நேரங்களில் மெரினா கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தபோதும், ஒரு நாய் என் அருகில் வந்து உட்கார்ந்திருந்தது.அந்த தருணத்தில் நான் உணர்ந்தது  “மனிதர்கள் விட்டு சென்றாலும், நாய்கள் விட்டு செல்லமாட்டார்கள்.”

அவை வெறும் விலங்குகள் அல்ல; என் ஆன்மாவின் அமைதியான காவலர்கள். ஒரு பசித்த தெருநாய் என்னை நோக்கி கண்களைத் தூக்கும் அந்த தருணம், மனிதகுலத்தின் பசியையும் தாகத்தையும் நினைவூட்டியது. நகரின் வீதிகள் இரவின் இருளில் மூழ்கும் வேளையில், மின்விளக்குகளின் கீழ் மெல்ல நடந்து செல்லும் ஒரு குழுவைக் காணலாம் – தெருநாய்கள்.

மனிதர்கள் அவற்றை பயப்படுகின்றனர், சிலர் அவற்றை வெறுக்கின்றனர், இன்னொருவர் அவற்றை அசிங்கப்படுத்துகின்றனர். ஆனால், ஒரு தேசாந்திரியின் கண்களில், அவை உயிர்களின் நிசப்தமான காவலர்கள், வீதியின் மறக்கப்பட்ட காவல் தெய்வங்கள். சாலையோரங்களில் குப்பைக் கூடைகள் அருகே தங்கியிருக்கும் அந்தக் கண்கள்  பசியால் துடித்தாலும், நம்பிக்கையால் பளிச்சிடும்.

நான் பயணிக்கும் ஒவ்வொரு நகரிலும், தெரு நாய்கள் எனக்கு ஒரு தனி அத்தியாயம். ரயில் நிலையங்களில், பேருந்து நிறுத்தங்களில், கோவில் வாசல்களில்  எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கள் வாழ்வின் நுனியில் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஒவ்வொரு தெருவின் வாசம், ஒவ்வொரு பகுதியின் தனித்துவம், அந்த நாய்களின் குரலில், பார்வையில், நடையில் மறைந்திருக்கிறது.

இலக்கியத்தின் பக்கங்களில் நாம் காணும் பாவலனின் தனிமை, சோகக்குரல், அன்பின் பிணைப்பு, அனைத்தும் இந்த தெரு நாய்களில் உயிர்த்தெழுகிறது. மனிதர்களால் தள்ளப்பட்டபோதும், அவர்கள் மனிதர்களையே நம்பிக்கையுடன் பின்தொடர்கின்றனர். அந்தத் தூய்மையான நம்பிக்கை, நம் சமூகத்தின் கண்ணாடியாக திகழ்கிறது.சமூகத்தின் சிதைந்த கருணையைக் கேள்வி கேட்கும் உயிர்கள் அவர்கள்.

பசியின் குரல், காயத்தின் மௌனம், இரவில் ஒலிக்கும் அலறல். இவை எல்லாம் ஒரு மறக்கப்பட்ட கவிதை.தேசாந்திரி ஆகி நகரங்களை வலம் வரும்போது, தெரு நாய்கள் எனக்குப் பயணத் துணையாகி விடுகின்றன. நான் செல்லும் இடமெல்லாம், அவர்களின் கண்களில் ஒரு அரசியல் கேள்வி, ஒரு சமூக குற்றச்சாட்டு, அதே சமயம் ஒரு மௌனமான அன்பு படிந்திருக்கிறது. தெரு நாய்கள் பற்றிய விவாதம் சிக்கலானதுதான்.

ஆனால் தேசாந்திரி  பார்வையில் பார்த்தால் அவர்கள் நகரின் “கட்டுப்பாடற்ற கவிஞர்கள்”. மனிதர்கள் போல உரிமைகள் கேட்க முடியாவிட்டாலும், அவர்களின் வாழ்வே நம் மனசாட்சியைக் கேள்வி கேட்கிறது.சமீபத்தில் நான் கேட்ட செய்தி என்னை உலுக்கியது. சில காரணங்களுக்காக நாய்களின் இனத்தையே அழிக்க வேண்டும் என்ற கொடுமையான சிந்தனை. இது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. முழு இனத்தையே அழிப்பது,அது மனிதனின் சுயநலத்தால் உருவான மிகப்பெரிய கொடுமை. ஏழைகள் இருப்பதால் ஏழை மக்களை அழிக்க வேண்டும்,பணக்காரர்களை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதர்களின் சுயநலத்துடன் ஒப்பிடத்தக்கது.

இயற்கை நமக்குத் தந்த அரிய வரங்களில் ஒன்று தெருநாய்கள். அவை இல்லாத நகரம்  உயிரில்லாத கான்கிரீட் காடு. அவை இருக்கிற நகரம். இன்னும் மனிதத் தன்மை இருக்கும் நகரம். எனக்கு, தெருநாய்கள் வெறும் உயிர்கள் அல்ல. அவை என் வாழ்க்கையின் சத்தியம். என் துயரங்களில் தோழன், என் மகிழ்ச்சிகளில் பங்குபெற்றவன். இயற்கை எனக்கு அளித்த மிகப் பெரிய வரம்.இன்றும், இனி வருங்காலத்திலும், நான் எந்த சாலையில் நடந்தாலும், அந்த வழியில் என் பக்கத்தில் நடந்து வரும் ஒரு தெருநாய் – அதுவே என் வாழ்வின் மிகப்பெரிய இலக்கியம்.

தீர்வின் தேடல்:

நகரத்தின் தெருக்கள், இரவில் வெறிச்சோடிய மேடைகள் போல.அந்த மேடையில் நாய்களின் குரல், தனிமையின் சங்கீதம்.இந்தக் குரல் மனிதனை அச்சுறுத்துகிறதா?அல்லது அவன் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கிறதா?சிக்கல் பெரிது. ஆனால் சிக்கலின் வேரில் பசி, பயம், பராமரிப்பின்மை.பசியின் குரலை உணவால் அடக்கலாம். பயத்தின் நிழலை அன்பால் அகற்றலாம். பெருக்கத்தின் சுமையை ஸ்டெரிலைசேஷன் மூலம் சமப்படுத்தலாம்.

தடுப்பூசி — உயிரைக் காக்கும் கவசம்.

தற்காப்பு தங்குமிடம் — தெருவை விட பாதுகாப்பான அரங்கம்.

மனிதனும் நாயும் பகைவர்களல்ல. இருவரின் உயிரும் ஒரே பூமியின் சொத்து. பிரச்சினையை “அழிப்பது” தீர்வல்ல.

பிரச்சினையை “அன்பால்” அணுகுவதுதான் நிலையான தீர்வு.

சமூகத்தின் பங்களிப்பு அவசியம். ஒவ்வொரு தெருவுக்கும் சிறு சமூக நலக்குழுக்கள்,அவர்கள் நாய்களை எண்ணிப் பதிவு செய்வது,தடுப்பூசி போட ஏற்பாடு செய்வது,உணவளிக்கும் முறைமையை அமைத்தல்,அரசு, தனியார், குடிமக்கள் — மூன்று சக்கரங்கள்.இந்த மூன்றும் இணைந்தால் தான் வண்டி முன்னேறும்.

நாய்களைத் துரத்தினால், அவை வேறு தெருவுக்குச் செல்கின்றன.ஆனால் பிரச்சினை அதேபடி தொடர்கிறது..நாய்களை நேசித்தால், அவை மனிதர்களுக்கு பாதுகாவலர்களாக மாறுகின்றன.பயம் குறையும்.அன்பு பெருகும்.நகரம் அமைதியாகும்.இது ஒரு கனவல்ல. சில நகரங்கள் இதை முயற்சி செய்திருக்கின்றன.அங்கு மனிதரும் நாயும் இணைந்து வாழ்கிறார்கள்.நமது நகரங்களும் அதே வழியில் செல்லலாம். உணவு, தடுப்பூசி, ஸ்டெரிலைசேஷன், தங்குமிடம் —இவை நான்கு தூண்கள்.அன்பே அதன் கூரை.அந்தக் கூரையின் கீழ் மனிதனும் நாயும் நிம்மதியாக வாழ்ந்திடும் நாள் தூரமில்லை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு! - தெரு நாய்கள் விவகாரத்தில் தேவையான புரிதல் #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விகடன்! - பெண்ணின் நெகிழ்ச்சி #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel contest 2 : வெற்றியாளர்கள் அறிவிப்பு | My Vikatan

விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan!யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது `மை விகடன்’... மேலும் பார்க்க

”ஆஹா கல்யாணம்” கட்டுரை போட்டியின் வெற்றியாளர்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பிரச்னையின் தீவிரம் புரிகிறதா? - தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவரின் பகிர்வு #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நிலை மாறிய நாய்கள்! - ஜீவகாருண்யம் மிக்க விலங்கு நல ஆர்வலர்கள் செய்ய வேண்டியது என்ன? #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க