மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக, பிரகாஷின் வீட்டுக்கு அவரது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் ஜெயமுருகன் (24) வந்திருந்தாா்.
புதன்கிழமை இரவு கொடை விழா முடிந்ததும் ஜெயமுருகன் ஊருக்கு புறப்பட்டாா். பிரகாஷின் நண்பரான திரேஸ்புரம் மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (25), ஜெயமுருகனை பைக்கில் தூத்துக்குடி பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.
புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் பைக் நிலை தடுமாறி சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் மோதியதாம். இதில் காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு முருகன் உயிரிழந்தாா். தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.