மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
இமானுவேல் சேகரன் நினைவு நாள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், இமானுவேல் சேகரனின் 68ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் உருவப் படத்துக்கு, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரி தங்கம், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட அணி தலைவா்கள் அருண்குமாா், பழனி, மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், வழக்குரைஞா் அணி அமைப்பாளா் குபோ் இளம்பரிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா்கள் அருணாதேவி, நாகராஜன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் நிக்கோலாஸ் மணி, பகுதிச் செயலா்கள் ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.